கூட்டமைப்பின் பின்னடைவு
பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு நாட்டிற்கும் குழப்பத்தை ஏற்படுத்திய அதேவேளையில், வடக்கிலுள்ள தமிழ் அரசியல் வட்டாரங்களும் இத்தேர்தல் பெறுபேறு தொடர்பாக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.