மேலும்

நாள்: 23rd February 2018

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்?

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவரை களைப்படைய வைத்து விட்ட உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும்  தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு

மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக  சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.