மேலும்

நாள்: 10th February 2018

பூநகரிப் பிரதேச சபை முடிவு – கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மை

கிளிநொச்சி மாவட்டம்,  பூநகரி  பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முடிவு – கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை

கிளிநொச்சி மாவட்டம்,  பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 வட்டாரங்களில், 6 வட்டாரங்களைக் கைப்பற்றிய போதிலும், விகிதாசார முறையில் எந்த இடங்களும் கிடைக்காததால், அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபை – அதிகாரபூர்வ முடிவு வெளியானது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

மகிந்தவின் சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு பெரும் வெற்றி?

சிறிலங்காவில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலி. வடக்கு பிரதேச சபையில் கூட்டமைப்பு பெரும் வெற்றி

வலிகாமம் வடக்கு பிரதேசபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளிலும் கூட்டமைப்பு அமோக வெற்றி

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும்  நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகள் தமிழ்க் காங்கிரஸ் வசம்

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான உறுப்பினர்களையும், 7 விகிதாசார ரீதியான உறுப்பினர்களையும் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.

காரைநகர் பிரதேச சபையில் கூட்டமைப்பு – சுயேட்சைக் குழு சமபலம்

காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சுயேட்சைக் குழுவும் வட்டார ரீதியில் சமபலத்துடன் இருப்பதால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.