மேலும்

நாள்: 7th February 2018

‘ ஒரு காணொளியை வைத்து அதிகாரிகளை நீக்க முடியாது’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

வெறுமனே ஒரு காணொளியை வைத்துக் கொண்டு, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு அபயம் அளித்த சிறிலங்கா அதிபர் – மீண்டும் பணியில் சேர அனுமதி

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணியில் இருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ரத்துச் செய்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் அழிக்கப்பட்ட திருகோணமலையின் 91ஆவது இலக்க எண்ணெய் தாங்கி

இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் திருகோணமலையின் மேற்குப் பக்கத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட எண்ணெய் கொள்கலன் தாங்கிப் பண்ணை (oil tank farm ) ஒன்று காட்டில் மறைந்து காணப்படுகிறது.

மகிந்தவின் குடியியல் உரிமைகளை குறிவைக்கும் ரணில் – சுதந்திரக் கட்சி, ஜேவிபி எதிர்ப்பு

மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்கவை சிறிலங்காவுக்கு திருப்பி அழைக்க பிரித்தானியா 2 வாரகாலக்கெடு?

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

28 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்து பொன்னாலை – பருத்தித்துறை வீதிக்கு விடுதலை

28 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு, நேற்று பருத்தித்துறைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் குழப்பங்களால் வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

சிறிலங்காவில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வெள்ளியன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

சிறிலங்காவில் எதிர்வரும் 10ஆம் நாள், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால்,  வரும் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உதயங்கவை கொழும்பு கொண்டு வர முயற்சி – காப்பாற்ற முனையும் உக்ரேனிய அதிகாரிகள்

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள், அபுதாபி அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.