மேலும்

நாள்: 20th February 2018

அமைதியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் – இரண்டு அமைச்சர்கள் புறக்கணிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் இன்று அமைதியான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் ‘தொங்கு’ சபைகளில் ஆட்சியைப் பிடிக்க தமிழ்க் கட்சிகள் போட்டி

அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், இங்கு ஆட்சியமைப்பது தொடர்பாக தீவிர முயற்சிகளில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

ஈரானிய நாசகாரிகள் கொழும்பை விட்டுப் புறப்பட்டன

நான்கு நாட்களாக கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் அணி நேற்று புறப்பட்டுச் சென்றது..

சிறிலங்கா குறித்து ஜெனிவாவில் இரண்டு முக்கிய விவாதங்கள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 37 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16ஆம் நாளும், மார்ச் 21ஆம் நாளும் சிறிலங்கா தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் விளக்கம் கிடைக்கும் வரை கூட்டு அரசு தொடரும் – திலங்க சுமதிபால

19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கு தனக்குள்ள அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ரணிலைப் பாதுகாக்கிறார் சிறிலங்கா அதிபர் – மகிந்த காட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.