மேலும்

மாதம்: February 2018

ஜெனிவாவுக்கு ஐவரை அனுப்புகிறது கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

அரைக் கம்பத்தில் பறக்கும் ஐ.நா கொடி – வெள்ளியன்று கொழும்பில் உனாவின் இறுதி நிகழ்வு

உடல்நலக் குறைவினால் திடீரென மரணமான சிறிலங்காவுக்கான, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் இறுதிநிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலையீட்டைக் கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு  அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்தும் போராட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எச்சரிக்கை விடுக்கும் இராஜாங்க அமைச்சர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரித்துள்ளார்.

அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய நடவடிக்கை

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அனந்தியையும் சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியத் துணைத் தூதுவருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த வாள்

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றி விடைபெற்றுச் செல்லும் நடராஜனுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு பெண்

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயற்கை மழைக்கு புதிய திணைக்களத்தை உருவாக்குகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதை, நிலப்பரப்பை வசப்படுத்துகிறது சிறிலங்கா விமானப்படை

மத்தல விமான நிலையத்தை அவசர தேவைகளுக்கும், தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கும் பயன்படுத்துவதற்கான உரிமையையும், விமான நிலையத்தின் ஒரு பகுதி நிலத்தையும் தமக்கு வழங்க வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.