மகிந்தவையும் சந்தித்தார் சீனத் தூதுவர்
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த 24ஆம் நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா- சீன உறவுகள் குறித்தும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொண்ட உடன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீனாவின் திட்டங்களுக்கு நிலங்களைப் பெற்றுக் கொள்ளும் போது, சிறிலங்கா மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாத வகையில், அதனை முன்னெடுக்குமாறு சீனத் தூதுவரிடம் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த சீனத் தூதுவர், மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.