மேலும்

நாள்: 14th February 2018

கரு ஜெயசூரியவும், சஜித் பிரேமதாசவும் பிரதமர் பதவியை நிராகரிப்பு

கூட்டு அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், சபாநாயகர் கரு ஜெயசூரியவை அல்லது, அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும்படி முன்மொழியப்பட்ட யோசனையை அவர்கள் இருவரும் நிராகரித்துள்ளனர்.

யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட் தெரிவு

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்டைத் தெரிவு செய்துள்ளது.

ஐதேக அரசில் இணையாது கூட்டமைப்பு – சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மைத்திரி- ரணில் சந்திப்பில் இணக்கப்பாடு – முடிவை எடுக்க சிறப்புக் குழு

தற்போதைய கூட்டு அரசாங்கத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பது தொடர்பாக, முடிவு செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றை அமைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் மைத்திரி, ரணிலுடன் அவசர சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும், நேற்று அவசரமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

தமிழில் தேசிய கீதம் பாடியதால் தான் ஐதேகவுக்கு தோல்வியாம் – திலக் மாரப்பன கண்டுபிடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதே முக்கிய காரணம் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.