மேலும்

நாள்: 16th February 2018

பதவி விலகமாட்டேன் – ரணில் அறிவிப்பு

அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ரணிலை நீக்குவது குறித்து சட்ட ஆலோசனை – கூட்டு எதிரணியிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.

சுஜீவ சேனசிங்க தாவினாலும் பெரும்பான்மை பலம் உள்ளது – ஐதேக நம்பிக்கை

மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஐதேக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

செப்ரெம்பரில் அடுத்த பூகம்பம் – தயார்படுத்துகிறது தேர்தல் ஆணைக்குழு

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது.

“பொய்… பொய்… முழுப்பொய் “ என்கிறார் மகிந்த

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று தாம் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

ஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் சரிவு – 157.20 ரூபாவாகியது டொலர்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இரண்டு நாட்களில், 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.