மேலும்

நாள்: 8th February 2018

உதயங்க வீரதுங்கவை விடுவித்தது அனைத்துலக காவல்துறை?

டுபாயில் அனைத்துலக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது முகநூல் பதிவு ஒன்றில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டுள்ளார்.

மட்டு. மாநகரசபை, மூதூர் பிரதேச சபைக்கு மிகநீளமான வாக்குச்சீட்டு

சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், மட்டக்களப்பு மாநகரசபைக்கும், மூதூர் பிரதேச சபைக்குமான வாக்குச்சீட்டுகளை மிகவும் நீளமானவையாக அச்சிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் உத்தரவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை – மஹேஷினி கொலன்ன

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் அமர்த்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவுடன் முடிந்தது தேர்தல் பரப்புரைகள் – மீறினால் கடும் நடவடிக்கை

சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அரசிதழ் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதிகளை திருப்திப்படுத்த முனைகிறார் மைத்திரி – கூட்டமைப்பு கண்டனம்

பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணி இடைநிறுத்தும் செய்யும் உத்தரவை ரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவை இடைநிறுத்திய அதிகாரிகளை கண்டித்த சிறிலங்கா அதிபர்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நீக்கியதற்கு  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ளார்.