மேலும்

நாள்: 24th February 2018

அமெரிக்காவின் பாரிய மருத்துவக் கப்பல் யுஎஸ்என்எஸ் மேர்சி சிறிலங்கா வரவுள்ளது

அமெரிக்க கடற்படையின் பாரிய மருத்துவக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி (USNS Mercy) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாதுகாப்புக் கருதியே பிரிகேடியர் பிரியங்கவை திருப்பி அழைத்தேன் – சிறிலங்கா இராணுவத் தளபதி

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்புக் கருதியே, அவரை தாம் பிரித்தானியாவில் இருந்து திருப்பி அழைத்ததாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி வருமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு

அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் வலியுறுத்தல்

நாட்டை உறுதியற்ற நிலைக்குச் செல்ல அனுமதிக்காமல், அரசாங்கத்தை உறுதிப்படுத்த துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமல் போனோர் பணியக சட்டம் குறித்து மார்ச் 7 இல் நாடாளுமன்ற விவாதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் மார்ச் 7ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க ‘ஏனைய வழிகளை’ ஆராயுமாறு கோருகிறார் செயிட் ஹுசேன்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்கான ஐ.நா தூதுவர் உனா மக்கோலி திடீர் மரணம்

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய வந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.