மேலும்

அம்பாந்தோட்டை குறித்து இந்தியாவுக்கு சிறிலங்கா கொடுத்துள்ள உத்தரவாதம்

Vice Admiral Ravindra Wijegunaratneஅம்பாந்தோட்டை துறைமுகம் எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படைக்கும் வழங்கப்படாது என்று இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான அ்ட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர்,’தி ஹிந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

”இந்தியாவின் பாதுகாப்புக்குக் கவலைகளை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய  நடவடிக்கைகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில்  மேற்கொள்ளப்படாது என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்.

அம்பாந்தோட்டையின் பாதுகாப்புத் தொடர்பாக எந்த இராணுவக் கூட்டணிக்குள்ளேயும் சிறிலங்கா நுழையாது என்று சிறிலங்கா தலைவர்கள் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை சிறிலங்கா ஆயுதப்படைகளும், கடற்படையுமே உறுதி செய்யும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *