மேலும்

நாள்: 4th February 2018

சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

இன்று கொண்டாடப்படும் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.

இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

டக்ளசுக்கு எதிரான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிக்கு பிடியாணை

சூளைமேடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளையும், சான்றுகளையும் முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு – மாணவிகளின் மடிக்கணினி நடனத்துக்குத் தடை

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் இன்று, ‘ஒரே நாடு’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் இன்று காலை சுதந்திர நாள் நிகழ்வுகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளன.