மேலும்

நாள்: 21st February 2018

அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும்

இவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது.

பேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்

தியத்தலாவவில் பேருந்துக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தமக்கு தகவல் தெரிவித்துள்ளார் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

தியத்தலாவவில் பேருந்தில் குண்டுவெடிப்பு – 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பேர் காயம்

தியத்தலாவவில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனர்.

கூட்டு அரசாங்கம் தொடர்கிறது – நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அது தொடரும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோ, கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் போராளியை நாளை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

வெளிநாடுகளுக்கான நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா இராணுவம்

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் தனியான நடவடிக்கைப் பணியகம் ஒன்றை உருவாக்கவுள்ளது.

மாணவர்களுக்கு டப்லட் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டப்லெட் கணினிகளை வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவ உயரதிகாரியைத் தடுத்தது ஐ.நா

லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது.