மேலும்

நாள்: 12th February 2018

வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொழும்பு அரசியலில் பரபரப்பு – தனித்து ஆட்சியமைக்கத் தயாராகும் ஐதேக

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள பெரும் வெற்றியை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சியை அமைக்கும் நடவடிக்கையில் ஐதேக இறங்கியு்ள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு மார்ச் 2ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு மார்ச் 2 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஐ.நாவின் முன்னாள் நிபுணர் காலமானார்

சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் சட்ட வல்லுனர், அஸ்மா ஜஹாங்கிர் மாரடைப்பினால் காலமானார் என்று பாகிஸ்தான் ஊடகம்  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கவில்லை – கோத்தா

அரசியலுக்கு வருவது தொடர்பாக தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தக் கோருகிறார் மகிந்த

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

சிறிலங்காவுக்குள் நடப்பதை அமெரிக்கா வெளிக்கொணர வேண்டும்

பெப்ரவரி 4 அன்று சிறிலங்கா தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. பெப்ரவரி 01 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் ‘அமெரிக்க-சிறிலங்கா உறவு கடந்த 70 ஆண்டுகளாகத் தொடரப்படுவதாகவும் இனி வருங்காலங்களில் இரு நாடுகளின் உறவையும் மேலும் மேம்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

கொழும்பு மாநகரசபையில் மனோவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 10 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார்.