மேலும்

நாள்: 6th February 2018

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த  பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

60 வீத நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு மாகாணம் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு மீள்குடியமர்வுக்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் மேற்பார்வை அரசு – ரணிலை கவிழ்க்க சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் திட்டம்

புதிய பிரதமர் தலைமையிலான மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு முடிவு செய்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும், முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் என்பன குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.