மேலும்

மாதம்: January 2018

பிரித்தானிய இளவரசர் சிறிலங்கா வந்தார்

ஐந்து நாட்கள் பயணமாக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் தமது துணைவியுடன் சிறிலங்கா வந்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பிரித்தானிய இளவரசரை, சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க வரவேற்றார்.

4.4 இலட்சம் இந்தியர்கள் குறிவைக்கிறது சிறிலங்கா

இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 4.4 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குடன் செயற்படுவதாக, சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மைத்திரி அரசின் சக்திவாய்ந்த அமைச்சரும் சிக்கினார்

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகாரமீறல்கள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரும், குற்றமிழைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஊவா முதல்வரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை விசாரணை

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை விசாரணைக்கு அழைத்துள்ளது.

வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும் ஆதரவாளர்கள்

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

ரவியிடம் இருந்து ஐதேக உதவித் தலைவர் பதவியைப் பறிக்க பரிந்துரை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து கீழ் இறக்கப்படவுள்ளார்.

மகிந்தவின் குடியுரிமையை பறிக்க கருத்து வாக்கெடுப்பும் அவசியம் – சரத் என் சில்வா

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டும் போதாது, கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகளை தடுக்க வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் மைத்திரி – பீரிஸ் குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

காலி மாவட்டத்தில் உள்ள, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.