மேலும்

நாள்: 5th February 2018

சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அவசரப்படுத்தும் சீனா – இழுத்தடிக்கும் சிறிலங்கா

சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்காவுக்கு நீண்ட காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – புதன் நள்ளிரவுடன் பரப்புரைகள் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் நாளை மறுநாள் (பெப்ரவரி 07) நள்ளிரவுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட 67 வேட்பாளர்கள்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள், மோசமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்திய ஊடகவியலாளரின் பார்வையில் சிறிலங்கா உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை – விக்னேஸ்வரன்

வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் அலோசியஸ், பலிசேனவிடம் 12 மணிநேரம் விசாரணை – விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுள்ள பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையானரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோத்தாவைச் சந்திக்கச் சென்ற போது டுபாயில் சிக்கினார் உதயங்க வீரதுங்க

டுபாயில் நேற்று கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.