மேலும்

நாள்: 1st February 2018

இந்திய, சீன உறவுகளை சிறிலங்கா எப்படிச் சமநிலைப்படுத்தப் போகிறது?

‘ஆசிய விவகாரங்களைக் கையாள்வதும், ஆசிய விவகாரங்களைத் தீர்ப்பதும் அதன் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் ஆசிய மக்களாவர்’ என 2014ல் இடம்பெற்ற ஆசியாவில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை கட்டுமான அளவீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து வெளியிட்டிருந்தார்.

சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கையில் இறங்குகிறது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்

காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின் நாடு திரும்பும் கோத்தாவைக் கைது செய்ய ஏற்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் மைத்திரியின் மாவட்டம் சாதனை – கிளிநொச்சியில் மிகக் குறைவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

திருமலை பொன்சேகாவுக்கு, வன்னி றிசாத்துக்கு, வடக்கு சுவாமிநாதனுக்கு- ரணில் அறிவிப்பு

திருகோணமலை அபிவிருத்திப் பணிகளுக்கான பொறுப்பு சரத் பொன்சேகாவிடமும், வடக்கை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சுவாமிநாதனிடமும், வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு றிசாத் பதியுதீனிடமும், ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.