மேலும்

நாள்: 19th February 2018

‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

கூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”

மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய  கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – மகிந்தவிடம் உறுதியளித்த சுசில்

வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15  அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே பதவி விலகுவேன் – ரணில் திட்டவட்டம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மாலை சிறப்பு விவாதம்

தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இன்று மாலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி சபைகளில் 25 வீத பெண் உறுப்பினர்களின் நியமனம் – இன்றைய கூட்டத்தில் முடிவு

புதிய கலப்பு முறையின் கீழ் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளின் அடிப்படையில்,  25 வீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பலாலியில் சிறிலங்கா படையினரின் புதிய பண்ணை – கூலிகளாக அமர்த்தப்படும் தமிழர்கள்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்களும், அனைத்துலக சமூகமும் வலியுறுத்தி வரும் நிலையில், பலாலிப் பெருந்தளப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா படையினர் தமிழ் மக்களின் காணிகளில் புதிய பண்ணைகளை உருவாக்கி வருகின்றனர்.

கச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் இருந்து ஒதுங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.