மேலும்

நாள்: 17th February 2018

சூடுபிடிக்கிறது சிறிலங்கா விவகாரம் – கடும் அழுத்தம் கொடுக்குமாறு ஜெனிவா கூட்டத்தில் வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – சட்ட நிபுணர்கள் கருத்து

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி,  பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் ரணில்

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன்,, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

செவ்வாயன்று அமைச்சரவை மாற்றம்?

கூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம்  எதிர்வரும் 20ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்பங்களால் நல்லிணக்கத்துக்கு ஆபத்து – மைத்திரி, ரணிலுக்கு மகாநாயக்கர் அவசர கடிதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த அதிபர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்த தொலைபேசியில் அழைத்தது உண்மையே – ரணில்

மகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கோரவில்லை – ரணில்

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கோரவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.