மேலும்

மாதம்: November 2017

புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – என்கிறார் சம்பிக்க

போரில் மரணமான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கில் நடத்தப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமரசம் பேச கரு, ரணில், சுமந்திரனைக் கொண்ட மூவரணி நியமனம்

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தியுள்ள ஆறு மனுதாரர்களுடன சமரசப் பேச்சுக்களை நடத்த சபாநாயகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாநகர சபைகள், வடக்கின் 4 மாவட்டங்களில் தேர்தல் இல்லை

எல்லை நிர்ணயச் சர்ச்சை மற்றும் சட்ட ரீதியான தடைகளால், பிரதான மாநகர சபைகளுக்கோ, வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கோ தேர்தல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை 30ஆம் நாள் விசாரிக்கக் கோரி சட்டமா அதிபர் மனு

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டு அரசில் இருந்து விலகினாலேயே சுதந்திரக் கட்சியுடன் இணைய முடியும் – பீரிஸ்

ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டால் மாத்திரமே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து ஆலோசிக்க முடியும் என்று மகிந்த அணியைச் சேர்ந்தவரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தாயக துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் (படங்கள்)

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது.

நினைவேந்தலுக்குத் தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் (படங்கள்)

மாவீரர் நாளான இன்று தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களும், மாவீரர் நினைவிடங்களும், புத்துயிர் பெற்று எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு எழுச்சியுடன் அஞ்சலி

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் மாவீரர்களுக்கு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

வரலாற்றின்பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

தமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின்  மூலம் உணர்ந்தவர்களாகவே  மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பணம் செலுத்துவதில் முந்தியது சிறிலங்கா பொதுஜன முன்னணி

சிறிலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.