மேலும்

மாதம்: July 2017

நாரஹேன்பிட்டி விகாரையில் அரசியல் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடைவிதிப்பு

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருத்து வீட்டுத்திட்டத் திட்ட உடன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மனு

வடக்கு, கிழக்கில் உலோகத்தினால் ஆன பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பாக, பிரெஞ்சு நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உடன்பாட்டையும் செய்து கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசில் இணைந்திருப்பதா என்று மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு – டிலான் பெரேரா

கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

விரைவில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு விரைவில் தனது அறிக்கையை வெளியிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 வரை நிறுத்தி வையுங்கள் – சிறிலங்கா அதிபர் கோரிக்கை

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், அதன் தலைவரும், சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையம் – ஜப்பான், இந்தியாவுக்கு அழைப்புக் கடிதம்

சிறிலங்காவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் திட்டங்களை அமைப்பதற்கு, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு  கடிதங்களை அனுப்பவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

திரியாய் கடற்பகுதியில் நீலத் திமிங்கலம் போர்ப் பயிற்சி – மரைன் படையினர் பங்கேற்பு

சிறிலங்கா கடற்படையின் மரைன் பற்றாலியன், நீலத் திமிங்கலம்-3 என்ற போர்ப் பயிற்சியை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கடற்கரைப் பகுதியில்  நடத்தியுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒற்றையாட்சி, பௌத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை ஆகிய விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.