மேலும்

மாதம்: July 2017

யாழ்ப்பாணத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் – பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகளில் பங்கேற்றார்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

கேப்பாப்புலவு: 5 மில்லியன் ரூபாவை வாங்கி விட்டு காலை வாரியது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் 189 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறிலங்கா இராணுவம் ஏமாற்றியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டது போல, நேற்று காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது – ராஜித சேனாரத்ன

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சிறிலங்கா- அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உதவி ஆய்வாளர் சிறீகஜன் வெளிநாடு செல்ல தடை – கைது செய்வதற்கு சிஐடி தீவிர முயற்சி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிக்க உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா காவல்துறையின் உதவி ஆய்வாளர் சிறீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிறிலங்காவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதி

போர் என்பது பல்வேறு அழிவுகளைக் கொண்டது.  உயிரிழப்பு மட்டுமல்லாது, காயங்கள் மற்றும் உடைமை அழிவுகள் போன்ற பல்வேறு அழிவுகளைக் கொண்ட ஒன்றாகும். ஆனால் இந்த யுத்தமானது தொடர்ந்தும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை

முல்லைத்தீவு- நாயாறில், சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை ஒன்றை சிறிலங்கா இராணுவம் புதிதாக அமைத்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர்- சிறிலங்கா இடையே சுதந்திர வர்த்தக உடன்பாடு

இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

5 மில்லியன் ரூபா கொடுத்து கேப்பாப்பிலவில் 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவில், சிறிலங்கா படையினர் வசம் இருந்த 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.