மேலும்

5 மில்லியன் ரூபா கொடுத்து கேப்பாப்பிலவில் 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

keppapilavuமுல்லைத்தீவு- கேப்பாப்பிலவில், சிறிலங்கா படையினர் வசம் இருந்த 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு 5 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டே, இந்தக் காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் கட்டடங்களை இடம்மாற்றுவதற்கு இராணுவத் தரப்பில் நிதி கோரப்பட்டதாகவும், இதையடுத்து. 5 மில்லியன் ரூபா பணம் தமது அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் கட்டடங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கேப்பாப்பிலவில் உள்ள 189 ஏக்கர் காணிகளை இன்று சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்கவுள்ளனர் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *