மேலும்

நாள்: 30th January 2016

சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவு

அரசாங்க சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச – ஓடிவந்த கோத்தா, பசில் ,சிராந்தி

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச சற்றுமுன்னர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

மீண்டும் படைபலத்தை வெளிப்படுத்தவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வு

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்புகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் யோசித ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப்.யோசித ராஜபக்ச இன்று பிற்பகல் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் நீதிக்கான தருணம் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

ஒரு ஆண்டிற்கு முன்னர், சிறிலங்காவிலுள்ள வாக்காளர்கள் தமக்கான புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக ஒன்றுகூடினார்.

சிறிலங்காவின் நீதிப்பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பு முக்கியம் – ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைய , நம்பகமான நீதிச் செயல்முறை மற்றும் நீதிப் பொறிமுறையில் அனைத்துலக  பங்களிப்பு என்பன முக்கியம் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் பீல்ட் மார்ஷல்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை – விஜேதாச ராஜபக்ச

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா- இல்லையா என்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரகீத் விசாரணையில் அம்பலமான மற்றொரு ஊடகவியலாளரின் கடத்தல் விவகாரம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கும், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொரு ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.