மேலும்

நாள்: 5th January 2016

நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டவரின் உதவி தேவையில்லை – சிறிலங்கா

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளை முடுக்கி விடுவதற்கு, அமைதி ஏற்பாட்டாளர் என்ற பெயரில் எந்த வெளிநாட்டவரின் உதவியும் தேவையில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். பொங்கல் விழாவுக்கு வருகிறார் பிரித்தானிய அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் பங்கேற்பார் என்று கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் சீனர்களின் ஆதிக்கம் வலுக்கிறது

சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் – உன்னிப்பாக கண்காணிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பில், சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லிம்கள் இணைந்து கொண்டிருப்பது குறித்து, நிலைமைகளை தாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற நிலையை சிறிலங்காவுக்கு வழங்குகிறது பாகிஸ்தான்

வர்த்தகத்துறையில், சிறிலங்காவுக்கு மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற நிலையை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்து

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சியை கைவிடோம், வடக்கு,கிழக்கை இணைக்கமாட்டோம்- என்கிறது சிறிலங்கா

சிறிலங்கா ஒற்றையாட்சி நாடாகவே இருக்கும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டு ஆதிக்கத்தை உடைக்கிறது அமெரிக்கா

சிறிலங்காவின் தென்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களை பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்காக முதலீடு செய்வதன் மூலம்,  தற்போது சிறிலங்காவின் தனிப்பெரும் முதலீட்டாளராக விளங்கும் சீனாவை அந்த நிலையிலிருந்து மிக விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு முகாமிலேயே ரவிராஜ் கொலை திட்டமிடப்பட்டது – நீதிமன்றில் சாட்சியம்

கொழும்பு, கங்காராம வீதியில் உள்ள லோன்றிவத்தை சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு முகாமிலேயே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் படுகொலைக்கான திட்டம் தீட்டப்பட்டது என்று, நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சி சொன்ன மேஜர் ஜெனரலுக்கு பிணை

கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவை பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய அனுமதித்துள்ளார்.