மேலும்

நாள்: 19th January 2016

சிறிலங்காவின் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன காலமானார்

சிறிலங்காவின் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன சற்று முன்னர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

கொழும்புத் துறைமுகம் வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு நான்கு வித நீதிக்கட்டமைப்புகளை ஆராய்கிறதாம் சிறிலங்கா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நான்கு விதமான நீதித்துறைக் கட்டமைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சூளைமேடு கொலை வழக்கு – டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நேற்று நீதிமன்றில் சாட்சியம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின் பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான, கொலை வழக்கில் சாட்சி விசாரணை நேற்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.

53 தமிழ்க் கைதிகளின் உடல்களை சிறிலங்கா படையினர் புதைப்பதைக் கண்டேன் – மயானத் தொழிலாளி

1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட தமிழ்க் கைதிகள் 53 பேர், இரண்டு கட்டங்களாக சிறிலங்கா இராணுவத்தினரால் பொரளை மயானத்தில் மூன்று பாரிய குழிகளில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் அனீஸ் துவான் என்ற மயானக் காவலாளி.

யாழ்.மாவட்ட மாணவர்களே பல்கலைக்கழக நுழைவுக்கு அதிகளவில் தகுதி

2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரத் தேர்வில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் மாலைதீவு முன்னாள் அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால், பிரித்தானியாவில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ள மாலைதீவு முன்னாள் அதிபர் முகமட் நசீட், லண்டன் செல்லும் வழியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் சந்தித்துள்ளார்.