மேலும்

நாள்: 29th January 2016

கொழும்புத் துறைமுகத்தில் பிரித்தானிய நாசகாரி

பிரித்தானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று  கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

சிங்க லேயின் பட்டத்து இளவரசர் யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

தேசிய தலைமைத்துவத்திற்கு கோத்தபாயவைக் கொண்டு வருவதற்கான பாரியதொரு ஆபத்தான நிகழ்ச்சி நிரல் தற்போது சிங்க லே அமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது. மிக விரைவில் கோத்தபாய, சிங்க லே அமைப்பின் முடிக்குரிய இளவரசனாக மாறுவார்.

நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டின் 15 வீதத்தை தின்று தீர்க்கும் சிறிலங்கா கடற்படை

சிறிலங்காவின் மொத்த எரிபொருள் பயன்பாட்டின் 15 வீதத்தை, சிறிலங்கா கடற்படையே நுகர்வதாக கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் தர்மேந்திர வெட்டேவ தெரிவித்துள்ளார்.

சம்பந்தன், சுமந்திரன் லண்டனில் ஆலோசனை

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு முறை தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் லண்டனில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

ஞானசார தேரருக்கு சலுகைகளை வழங்கிய சிறைச்சாலை ஆணையாளரின் பதவி பறிப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பொறுப்பான, மூத்த சிறைச்சாலைகள் ஆணையாளர் அனுர எக்கநாயக்க நேற்று அதிரடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குத்துக்கரணம் அடித்தார் ரணில் – சனல் 4 செவ்வியை மறுக்கிறார்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சி செவ்வியில் தான் கூறவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணையே நடக்கும், அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அரசு

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இருக்காது என்றும், உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன.