மேலும்

நாள்: 17th January 2016

கப்பல் போக்குவரத்து வழி மீது அமெரிக்கா அக்கறை – சிறிலங்கா கடற்படையுடன் ஆலோசனை

இந்தியப் பெருங்கடல் பகுதியின் முக்கியத்துவம்மிக்க வணிக மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

நாட்டுப்புற இசைக் கலைஞர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைந்தார்

நாட்டுப்புற இசைக் கலைஞரும், புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன்,  உடல்நலக் குறைவால் இன்று தனது 60 ஆவது வயதில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிக்கப்படாது – பலாலி பாதுகாப்பு மாநாட்டில் ரணில் திட்டவட்டம்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

100 கோடி ரூபா செலவில் கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம்

கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம் அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் – ஹியூகோ ஸ்வைர்

ஜூன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 03

‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.

ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.