கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – ஜனவரி 6இல் இறுதி முடிவு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, வரும் ஜனவரி 6ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, வரும் ஜனவரி 6ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தல் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்க, சிறிலங்கா இராணுவ சட்டப் பிரிவு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.
ஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பாதுகாப்பு ஊடகமான ஐஎச்எஸ் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் நாள் மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
விடுதலைப் புலிகளும், இஸ்லாமிய பயங்கரவாதமும் நாட்டில் தலைதூக்கி வருவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில், “அனுமன்” பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய சிறிலங்காவின் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.