மேலும்

நாள்: 1st January 2016

எந்தச் சவாலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் சிறிலங்கா இராணுவம் – கிரிசாந்த டி சில்வா

எந்தச் சவாலை எதிர்கொள்வதற்கும் தயார் நிலையில், சிறிலங்கா இராணுவம் இருப்பதாக, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள்

திருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன.

கனவு மெய்ப்பட வேண்டும்…!

2016 எனும், புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். புதினப்பலகை நிறுவக ஆசிரியர் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் இழப்பு உள்ளிட்ட சோகங்கள், தமிழர் தாயகத்திலும்  தமிழ்நாட்டிலும் ஏற்பட்ட   பெரு வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், வரலாற்றுப் பாடங்கள் என பலவற்றைத்தந்த 2015ஆம் ஆண்டு நேற்றுடன் விடை பெற்றிருக்கிறது.

பாகிஸ்தான் போர் விமானங்களை சிறிலங்கா வாங்காது – இந்திய ஊடகம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட, சீனாவில் வடிவமைக்கப்பட்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்காவின் முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் இரகசிய வதைமுகாம்

சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

புத்தாண்டில் ஈழத்தமிழ் மக்களது உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் – வி.உருத்திரகுமாரன்

உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முன்னோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்புடனும் நாம் இப் புதிய ஆண்டை வரவேற்றுக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் மறக்கமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் – இரா.சம்பந்தன் வாழ்த்து

தேசியப் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள  தீர்வை எட்டுவது, நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டுவது உள்ளிட்ட இமாலய  முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கு புத்தாண்டில், நாட்டின் அனைத்துக் குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளார்.