மேலும்

நாள்: 13th January 2016

சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற உரைக்கு இந்தியா பாராட்டு – நேரில் தெரிவித்தார் ஜெய்சங்கர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை இந்தியா பாராட்டியுள்ளது. இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய போது, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறுவேன் – சம்பந்தனிடம் ஜெய்சங்கர் உறுதி

வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறுவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

நீதிவான் எச்சரிக்கையால் ஆடிப்போட சிறிலங்கா இராணுவ தளபதி – கிரித்தல புலனாய்வு முகாமுக்கு ‘சீல்’

ஹோமகம நீதிவானின் எச்சரிக்கையை அடுத்து, கிரித்தல இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமை, ‘சீல்’ வைத்து மூட சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு எந்த சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது – சுமந்திரன்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளை தடைசெய்ய கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளை அனைத்துலக அளவில் தடைசெய்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும், அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்- சம்பந்தன் நம்பிக்கை

பிரிக்கப்படாத – ஒன்றுபட்ட இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை  உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு – கூட்டமைப்புடன் பேசப்போகிறதாம் சிறிலங்கா அரசு

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரங்களைப் பகிர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் சிறிலங்காவின் அரச நிறுவன மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்ட ஜெய்சங்கர் – இன்று கூட்டமைப்புடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதும், இந்தப் பேச்சுக்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியில் கசிய விடப்படவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு சம்பந்தன் கடும் எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.