மேலும்

நாள்: 25th January 2016

ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நாவில் கொடுத்த வாக்குறுதியை சிறிலங்கா காப்பாற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் போர்க்கப்பல்களுடன், சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சி

நான்கு நாள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற நாசகாரி போர்க்கப்பலும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வரும் வரை அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை?

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது, சிறைகளில் உள்ள பல தமிழ் கைதிகளை விடுவிக்க முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் இதயத்தை வென்றால் மட்டுமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்- சிறிலங்கா அதிபர்

உட்கட்டமைப்பு அபிவிருத்தியால் மட்டும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்வதன் மூலமே அதனை அடைய முடியும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04

‘ஒரு விடுதலைப் போராட்டத்தில்  வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’