மேலும்

நாள்: 26th January 2016

பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்த் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் ஒருமைப்பாடு, இறைமையை இந்தியா பாதுகாக்கும் – வை.கே.சின்ஹா

சிறிலங்காவின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாகவும், சிறிலங்காவின் ஒற்றுமை, இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதிபூண்டிருப்பதாகவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாரீசு-2 நகரசபையில் நடந்த “தமிழர் திருவிழா – பொங்கல் 2016 – தமிழர் திருநாள்” நிகழ்வரங்கம்

பிரான்சில் சிலம்புச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  பத்தாவது தமிழர் திருநாள் நிகழ்வு சென்ற 17.01.2016 அன்று பாரீசு -2 நகரசபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்கொட்லாந்து சமஷ்டி முறை குறித்து ஆராய சம்பந்தன், சுமந்திரன் லண்டனுக்குப் பயணம்

ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஸ்டி அரசியலமைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று லண்டனுக்குப் பயணமானார்.

ஞானசார தேரருக்கு பெப். 9ஆம் நாள் வரை விளக்கமறியல் – ஹோமகம நீதிமன்றத்தில் பதற்றம்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளதாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரரை அடுத்த மாதம் 9ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கு நெருக்கடி கொடுத்த அரச சட்டவாளர் பிரகீத் வழக்கில் இருந்து நீக்கம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கை நடத்திய வந்த அரச சட்டவாளர் திலீப் பீரிஸ் இன்று காலை திடீரென அந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பதில் சட்டமா அதிபர் சுகத கம்லத் இதுபற்றி இன்று காலை அறிவித்துள்ளார்.

நோர்வே ‘தமிழ் 3’ வானொலியின் தமிழர் மூவர் – 2016 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்

நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் பேராளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 பெண்கள் அல்லது ஆண்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.

காணாமற்போனோரின் கதி என்ன? – 12 மாதங்களுக்குள் அறியத் தருவாராம் பரணகம

தமது ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை இன்னும் 12 மாதங்களுக்கு நீடித்தால், காணாமற்போனோர் தொடர்பான 20 ஆயிரம் முறைப்பாடுகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம.

தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர் துறப்பாராம் மகிந்த

அமெரிக்க வங்கிகளில் தனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறாவிடின் குற்றவாளிகளாக ஓரம்கட்டப்படுவோம் – சிறிலங்கா அதிபர்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறப் பின்னடித்தால், அனைத்துலகம் எம்மை ஒதுக்கி வைத்து விடும் என்பதுடன், குற்றவாளிகளாகவும் முத்திரையை குத்தி விடும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.