மேலும்

நாள்: 8th January 2016

தன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு ஆசீர்வாதம் அளித்தார் மைத்திரி

தன்னைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்குப் பொதுமன்னிப்பு அளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரைச் சந்தித்து ஆசியும் வழங்கினார்.

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய அழைக்கிறார் ரணில்

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்- நோர்வே

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

கோத்தாவிடம் நேற்று 7 மணிநேரம் விசாரணை – இன்றும் தொடரும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை,  இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

தெல்லிப்பழைப் பகுதியில்,  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சவையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அடுத்தவாரம் சீனா செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வரும் 13ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே, மகிந்த ராஜபக்ச பீஜிங் செல்லவுள்ளதாகவும், வரும் 16 ஆம் நாள் வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி

போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.