மேலும்

நாள்: 12th January 2016

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்  ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று முற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார்.

கடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜப்பான் – சிறிலங்கா உயர்மட்டப் பேச்சு

பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்காவும், ஜப்பானும், இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளன.

‘ஒற்றையாட்சி’யில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

ஒற்றையாட்சி விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும், புதிய அரசியலமைப்பில் அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அடுத்தமாத முற்பகுதியில் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி  சுபினே நந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கை இணைக்கவோ, 13க்கு அப்பால் செல்லவோ அனுமதியோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

அரசியலமைப்பு மாற்றத்தின்போது, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிரவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என்று, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சிறிலங்கா – பிரித்தானிய ஊடகம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.