மேலும்

நாள்: 31st January 2016

சிங்கத்தின் வாலைப் பிடித்திருக்கிறீர்கள் – மகிந்தவின் இளைய மகன் எச்சரிக்கை

தனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச.

வெலிக்கடைச் சிறையில் யோசிதவைச் சந்தித்தார் மகிந்த

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.

சிறிலங்கா அதிபரின் கருத்து – பிரித்தானிய அதிகாரிகளிடம் கூட்டமைப்பு அதிருப்தி

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

யோசித மீதான நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருக்கிறது சிறிலங்கா கடற்படை

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், லெப்.யோசித ராஜபக்ச தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்

வரும் வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிற்கு ஒத்துழைக்காத சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைது செய்வதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05

‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும்   உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும். 

பெர்லின் செல்லும் சிறிலங்கா அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை

அடுத்தமாதம் ஜேர்மனியின் பெர்லின் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.