மேலும்

நாள்: 3rd January 2016

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

போர் விமானக் கொள்வனவு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படைக்கு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதகால பதவிநீடிப்புக் கேட்கிறது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும், அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஆறு மாதகால பதவி நீடிப்பைக் கோரவுள்ளது.

சீனாவுடன் உறவை வலுப்படுத்த சீறிலங்கா விருப்பம் – பீஜிங் செல்கிறார் ரணில்

சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விரும்புவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழு இந்த ஆண்டு பீஜீங் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம் அடைக்கலநாதனுக்கு மாரடைப்பு – சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயணம் – இன்னமும் முடிவு இல்லை

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் சிறிலங்கா பயணம் குறித்த காலஅட்டவணை இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.