மேலும்

நாள்: 4th January 2016

பாகிஸ்தான் பிரதமருக்கு கட்டுநாயக்கவில் செங்கம்பள வரவேற்பு

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை சிறிலங்கா வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெனிவா தீர்மானம் குறித்து சம்பந்தனுடன் ரொனி பிளேயர் ஆலோசனை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் இன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மைத்திரியின் வாக்குறுதியை வரவேற்கிறது கூட்டமைப்பு

இடம்பெயர்ந்துள்ள ஒரு இலட்சம் மக்கள் ஆறு மாதங்களுக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதி சாதகமானதொரு முன்னேற்றம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விக்னேஸ்வரனின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க அவசரப்படமாட்டோம் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தை  அமைக்கும் விவகாரத்தில், தமது அரசாங்கம் அவசரமாகச் செயற்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தெற்கில் ‘சிங்க லே’ பரப்புரை தீவிரம் – ‘இனவாத தீ’ பரவுகிறதா?

சிறிலங்காவின் தென்பகுதியில், சிங்க லே (சிங்கத்தின் இரத்தம்) என்ற இனவாதப் பரப்புரை தீவிரம் பெற்றுள்ள நிலையில், நுகேகொட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் சுவர்கள், கதவுகளில், சிங்க லே என்று இனந்தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ளது.

இரண்டாம் முள்ளிவாய்க்கால்

இந்தத் தொடர் எவரையும் எந்த அமைப்பையும்  நியாயப்படுத்துவதற்கோ எவர் மீதும் எந்த அமைப்பின் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுவதற்கோ எழுதப்படுவதல்ல. இது முள்ளிவாய்க்காலின் பின்னரான பின்போர் சூழலில் நடந்துவரும் பிழைப்பவாத அரசியலை  கட்டுடைப்பதை நோக்கமாகக் கொண்டது.

பத்தாண்டுகளுக்குப் பின் சிறிலங்கா வருகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜெனீவா தீர்மான விவகாரம்- சிறிலங்கா வந்த ஐ.நா சட்டத்துறைக் குழு

ஜெனீவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டத்துறை சார் குழுவொன்று கடந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த இராஜதந்திரியைக் கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் தொடர்பாக, ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், மூத்த இராஜதந்திரி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.