மேலும்

நாள்: 27th January 2016

முறைகேடாக கடற்படையில் இணைந்த யோசித ராஜபக்ச – நாடாளுமன்றில் அறிக்கை

சிறிலங்கா அதிபர் செயலகத்தின் அறிவுரையின் பேரில், லெப்.யோசித ராஜபக்ச மீது, சிறிலங்கா கடற்படை நடவடிக்கையை எடுக்கும் என்று சிறிலங்கா அரசின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

புதிய போர்க்கப்பல்களை வாங்குகிறது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படையில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இணைத்துக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டை நிராகரிக்க முடியாது – ரணில்

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில், அனைத்துலகத் தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிராந்திய அரசியல் போட்டிக்குள் சீன- இந்திய போர் விமானங்கள்

பூகோள அரசியல் போட்டிகள் நிலவும் இக்கால கட்டத்தில் கடந்த வியாழனன்று ஆரம்பமாகியுள்ள 2016ம் ஆண்டிற்கான பஹ்ரெய்ன் விமானக் காட்சி நிகழ்வில் பங்குபற்றும் ஆசியப் போர் விமானங்களின் பல பில்லியன் டொலர் இராணுவ ஒப்பந்தங்கள்  அனைத்துலக செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கும்.

கைவிட முடியாத கனவு

தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.  

ஒற்றையாட்சி முறை நீடித்தால் நாடு பிளவுபடும் – சுமந்திரன்

சிறிலங்காவில் ஒற்றையாட்சி முறை நீடித்தால், நாடு பிளவுபடும் ஆபத்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெரும் போராட்டத்துக்குப் பின் சிறைக்கு அனுப்பப்பட்ட ஞானசார தேரர் – பிக்குகள் அடாவடித்தனம்

ஹோமகம நீதிமன்றத்தினால் நேற்று முற்பகல் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுமாலையே சிறப்பு அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்கொட்லாந்தின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய சித்தார்த்தனும் இன்று லண்டன் பயணம்

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனும் இன்று லண்டன் செல்லவுள்ளார்.

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை சமர்ப்பிக்க வடக்கு மாகாணசபையும் குழு அமைப்பு

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் சார்பில் யோசனையை முன்வைப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தக் குழு பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார்.