ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக பொறுப்புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, லெப்.யோசித ராஜபக்ச, சிறிலங்கா கடற்படைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவுளள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சிறிலங்காவுக்கு வழங்கும் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹோமகம நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 376,412 ஆல் அதிகரித்துள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்புறம் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் யாழ். கல்விச் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடி அதிகரித்து. அங்கிருந்து குடிநீரை விநியோகிப்பது தான், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஒரே தீர்வு என்று சிறிலங்காவின் நகர திட்டமிடல், நீர்விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.