மேலும்

நாள்: 14th January 2016

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கிரித்தல இராணுவ முகாமில் இருந்த முக்கிய புலனாய்வு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

கிரித்தல இராணுவ முகாமில் உள்ள முக்கியமான இராணுவப் புலனாய்வு ஆவணங்கள் இராணுவக் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணா குழுவுடனான தொடர்பினாலேயே ரவிராஜ் கொலையை மறைத்ததாக கூறுகிறார் அரசதரப்பு சாட்சி

கருணா குழுவினருடன் தொடர்புகளை வைத்திருந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக, அரசதரப்புச் சாட்சியான சிறிலங்கா காவல்துறையில், அதிபர் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பிரீத்தி விராஜ் தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலுள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடும் யோசனை- அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்

ஈராக்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடுவதற்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினால், சிறிலங்கா அமைச்சரவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

புதிய அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்ட அதிகாரப்பகிர்வு – இந்தியா விருப்பம்

13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வை அடிப்படையாக கொண்டு, புதிய அரசியலமைப்பு வரையப்படுவதை இந்தியா விரும்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் ஸ்வைர் – தேசிய பொங்கல் விழாவிலும் பங்கேற்கிறார்

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக வரவுள்ளார்.