மேலும்

நாள்: 11th January 2016

இராணுவக் கட்டளை அமைப்பில் மாற்றம்- டிவிசன் தளபதியாக கீழ் இறக்கப்பட்டார் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவக் கட்டளை அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா 53ஆவது டிவிசனின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதென்று தீர்மானி்க்கவில்லையாம்

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் எதையும் வாங்குவதற்கு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய அனைத்துலக உதவியுடன் சிறப்பு நிதியம் – சிறிலங்கா பிரதமர்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை  பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், சிறப்பு நிதியம் ஒன்று இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வரும் 21ஆம் நாள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வதைமுகாம் இரகசியங்கள்

யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரின் பிடியில் இருந்து புதிதாக விடுவிக்கப்பட்ட 701 ஏக்கர் பரப்பளவு பிரதேசத்தில் உள்ள வீமன்காமம் பகுதியில், இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன.

ஏனைய தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – பொதுமன்னிப்பில் விடுதலையான ஜெனிபன்

தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார் அண்மையில் விடுதலையான சிவராசா ஜெனிபன்.