மேலும்

நாள்: 18th January 2016

நாளாந்தம் 2 மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிக்கும் 9 இலட்சம் அரச பணியாளர்கள்

சிறிலங்காவில் அரச பணியாளர்கள் நாளொன்றுக்கு வேலை நேரத்தில் இரண்டு மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிப்பதாகவும், இதனால், நாளாந்தம் 1.8 மனித மணித்தியாலங்கள் அரச சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புலிகளுக்கு நிதி சேகரித்தார் என ஈழத்தமிழர் மீது ஜேர்மனி நீதிமன்றில் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில், ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் – சரிகிறதா மைத்திரியின் செல்வாக்கு?

சிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ளார்.

புதிய அரசியலமைப்பு 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டக் கூடாது – என்கிறார் மகிந்த

புதிய அரசியலமைப்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு முறையைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க முதல்முறையாக சிறிலங்காவுக்கு அழைப்பு

ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின், 2016ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சுவிற்சர்லாந்து செல்லவுள்ளார். இந்த மாநாடு சுவிற்சர்லாந்தின், டாவோஸ் நகரில் வரும் 20ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

43 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா அதிபருக்கு ஜேர்மனி அழைப்பு

43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைத் தமது நாட்டுக்கு வருமாறு ஜேர்மனி அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – என்கிறார் ரணில்

நாட்டைப் பிளவுபடுத்தவோ, ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கவோ மாட்டோம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்தியக் கடற்படையின் பாய்க்கப்பல்களும் கொழும்பு வந்தன – சீனாவுடன் போட்டி?

சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியக் கடற்படையின் இரண்டு கடற்பயணப் பயிற்சிப் பாய்க்கப்பல்கள் இரண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

ஆட்சிமாற்றத்துக்குப் பின் முதல்முறையாக மூன்று சீனப் போர்க்கப்பல்கள் கொழும்பு வருகை

ஐந்து நாள் பயணமாக சீனக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.