மேலும்

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை – விஜேதாச ராஜபக்ச

Wijeyadasa Rajapaksheஉள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா- இல்லையா என்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று நீதிஅமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்ளக விசாரணைப் பொறிமுறையை அமைக்கவுள்ளது.

இந்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்வதா- இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான விவகாரம் தொடர்பான விரைவில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படும். அதுவரை எதனையும் அதிகாரபூர்வமான கூற முடியாது.

இந்த விடயத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதில் அர்த்தமில்லை. இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து தீர்மானத்தை எடுத்த பின்னர், அனைவருக்கும் அறிவிப்போம்.

அண்மைய சில மாதங்களாக பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

வரவு செலவுத்திட்டம் போன்ற விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தமையினால், வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தில் உடனடியான இறுதி தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.

தற்போது இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருவதால், விரைவில் முடிவை அறிவிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *