மேலும்

மாதம்: May 2019

சிறிலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர்

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 9 ஆம் நாள் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 9ஆம் நாள்,சிறிலங்காவுக்கு குறுகிய  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இதனை உறுதிப்படுத்தினார்.

சிறிலங்கா காவல்துறையின் தகவல் வலையமைப்பு மீது வைரஸ் தாக்குதல்

சிறிலங்கா காவல்துறையின் காவல் நிலையங்களுக்கு இடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மெய்நிகர் தகவல் வலையமைப்பு (VPN network) மீது வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரசியல், இராணுவ விவகாரங்களுக்கான உதவிச்செயலர் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச்செயலர், ஆர்.கிளார்க் கூப்பர் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அதுரலியே ரத்தன தேரர்

சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மீண்டும் போட்டியிடுவாரா மைத்திரி? – புதுடெல்லியில் மனம் திறந்தார்

மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதா என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்

இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

‘புலனாய்வுத் தகவல் எனக்கு தெரிவிக்கப்படவில்லை’ – என்கிறார் சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து, சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.