மேலும்

மாதம்: January 2020

ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா?

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  சுமேத பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி

எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா.

சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்

இரண்டு இந்திய வங்கிகள் சிறிலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன.

தூதுவர்கள் நாடு திரும்ப இரண்டு வார காலஅவகாசம்

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சை வசப்படுத்த விஜேதாச மூலம் வியூகம் வகுக்கும் கோத்தா

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் சிறிலங்கா அதிபர் தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு வரலாற்று இடங்களில் ஆய்வு நடத்தவுள்ள புத்தசாசன அமைச்சு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்று இடங்கள் குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர்

வடக்கு, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பிஎஸ்எம் சார்ள்ஸ், நாளை யாழ்ப்பாணத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

நேவி சம்பத் பிணையில் விடுதலை

கொழும்பில் 2008 / 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்.கொமாண்டர்  சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.