சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை
சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையோ, அவரது குடும்பத்தினரையோ அல்லது போரை வென்றெடுத்த படையினரையோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல தான் அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.இவர் தனது பதவிவிலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
ஆயுதக் குழுவொன்றை முற்றாக அழிப்பதன் மூலமோ அல்லது இராணுவ வெற்றியை நிலைநாட்டுவதன் மூலமோ வெற்றிகொள்ளப்படும் எந்தவொரு யுத்தமும் ஒரு ஆட்சியை சிறந்த வழியில் நடாத்துவதற்கான வழியாக இருக்காது.
சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு இன்று பாகிஸ்தான் விமானப்படைத் தலைமையகத்தில் மரபுரீதியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தேசிய மருந்துக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 100 கோடி ரூபாவை மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிரணியின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக வெளியான அறிக்கை குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை இல்லத்தில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவர் தலைவர் ரிச்சர்ட் ஓட்டாவே தெரிவித்துள்ளார்.