மேலும்

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகளை வலியுறுத்துகிறார் பாப்பரசர்

pope-sl (1)சிறிலங்காவில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நிலையையும், உண்மையான நல்லிணக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரையாற்றும் போதும், நேற்றுமாலை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த மதத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போதும், இதனை வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், கடந்தகால மனித மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சிறிலங்கா அழகிய நாடு. இந்து சமுத்திரத்தின் முத்தாகத் திகழ்கிறது. மக்கள் ஐக்கியம் மற்றும் கலாசார, மத மரபுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடு.

உலகில் பல்வேறு சமூகங்கள் தமக்கிடையில் போர் புரியும் ஒரு வருந்தத்தக்க நிலை தொடர்கிறது.

வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளை சரிசெய்ய முடியாமை, பழைய அல்லது புதிய மத மற்றும் இன ரீதியான முரண்பாடுகள் போன்றனவே வன்முறைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.

சிறிலங்கா நீண்டகாலமாக உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்ததை நாம் அறிவோம்.

எனினும் இந்த வடுக்கள் ஆறி தற்போது அமைதியானதொரு சூழ்நிலை காணப்படுகிறது.

மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள், அவநம்பிக்கைகள் என்பவற்றிலிருந்து உடனடியாக மீள்வது இலகுவானதல்ல.

நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமையின் மூலமே இவற்றிலிருந்து விடுபட முடியும்.

ஆற்றுப்படுத்தலானது பழைய காயங்களைக் கிளறுவது போலன்றி உண்மையான நோக்கத்திலானதாக அமைய வேண்டும்.

இதற்கு சமாதானம் மற்றும் ஒற்றுமை அவசியமானது.

pope-sl (2)

pope-sl (3)

pope-sl (4)

இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க மற்றும் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் அனைத்து சமய மரபுகளும் முக்கியமான பங்களிப்புச் செய்ய வேண்டும்.

இதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து, ஒரே நிலையில் செயற்பட வேண்டும்.

அனைவரும் தமது கருத்துக்களை, நிலைப்பாடுகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளை சுதந்திரமாக வெளியிடக் கூடியதாக இருக்க வேண்டும்.

இதில் மிகவும் முக்கியமான விடயம் ஒருவருடைய கருத்தை மற்றையவர் மதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவருடைய சொல்லை மற்றையவர் பணிவாக, வெளிப்படையாக செவிமடுத்தால் அவர்களின் மதிப்பு மற்றும் அபிலாசைகள் என்பன உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு நடந்துகொண்டால் பல்வகைத்தன்மைக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் ஏற்படாது.

இதன் மூலம் சமாதானம், நல்லிணக்கம், சமூக ஒற்றுமைக்கான பாதை உருவாகும்.

இந்தநிலையில் உட்கட்டுமான புனரமைப்பின் மூலம் சிறந்ததொரு மீள்கட்டுமானத்தை மேற்கொள்ள முடியும்.

இதனைவிட மனித கண்ணியத்தை ஊக்குவித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், அனைத்து சமூக உறுப்பினர்களையும் உள்ளீர்த்துக்கொள்ளல் என்பன மிகவும் முக்கியமானவை.

சிறிலங்காவின் அரசியல், மத மற்றும் கலாசார தலைவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் செயற்பாடுகளும் காயங்களை ஆற்றுவதற்கும் பொருளாதார மற்றும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் உறுதுணையாகும் வகையில் அமைய வேண்டும். என்றும் பாப்பரசர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *